எத்தனை சமாதான சொற்களை கூறினாலும், எவ்வளவு நியாயப்படுத்த முயன்றாலும், ஒருவரை அது ஆணோ, பெண்ணோ அவர்கள் நம்மை மிகவும் நேசிப்பவர்களாகவும், நம் நலம் விரும்பிகளாகவும் மற்றும் நம்மை சார்ந்து இருப்பவர்களாகவும் இருக்கும் பட்சத்தில் அவர்களை உடல் ரீதியாகவோ இல்லாது மன ரீதியாகவோ எவ்விதத்திலும் என் சுயத்தின் காரணமாக அவர்களை துன்புறுத்துவது என்பது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவன்.
அப்படிதான் என் ஆழ்மனதில் இருக்கிறது அதையே மற்றவர்களுக்கும் நான் போதித்திருக்கிறேன்.
பொதுவாகவே என்னை அனைவரும் மிகுந்த பொறுமையானவன், மென்மையானவன் என்றே வீட்டிலும், அலுவலகத்திலும் கூற கேள்விப்பட்டிருக்கிறேன்.
அனால் என்னுள் என்னை அறியா ஒரு கோபம் பீறிட்டுக்கொண்டு வருகிறது ஆனால் அது ஒரு சில குறிப்பிட்ட தருணங்களில் மட்டுமே வருகிறது. இதை நான் பலமுறை யோசித்ததுண்டு. எத்தனையோ புத்தகங்கள் படித்திருந்தாலும், எத்தனையோ உணர்வுசார், மனநல மற்றும் உளவியல் சம்பந்தமான எண்ணற்ற பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு அதை என்ற வாழ்வில் கடைபிடித்து வந்தாலும் இது போன்ற ஓரிரு சந்தர்ப்பங்களில் எப்படி என்னை மறுக்கிறேன் என்பது இன்று வரை வியப்பாகவே இருக்கிறது.
நீண்ட ஆராய்தலுக்கு பிறகு நானறிந்த ரகசியம் கோபத்தை கட்டுக்குள் வைத்து அதை வெளிக்காட்டாமல் தவிர்க்கமுடியுமே தவிர கோபமே வருவதக்கன சூழ்நிலையை தவிர்க்கமுடியாது என்பதே. எனவே ஒன்று கோபத்தை வெளிக்காட்டிவிடுவது மற்றொன்று கோபத்தை வேளிக்காட்டாமல் தவிர்ப்பது என்பதே.
இதில் நம் கோபத்தை வெளிக்காட்டுவது என்பது இருவகை :
1. கோபத்தில் அடித்துவிடுவது - பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதும், சிறுவயதில் சகோதர சகோதரிகள் அடித்து கொள்வதும், பெரியவர்கள் மிக கடுமையாக அடித்துக்கொள்வதும் இதில் அடக்கம்.
2. வாய்மொழி துஷ்பிரயோகம் - உரத்த குரலில் மிக சத்தமாக கத்துவது (பெரும்பாலும் பெண்கள்), அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவது (பெரும்பாலும் ஆண்கள், மனதளவில் பாதிப்படைந்தவர்கள் ), மனதை காயப்படுத்தும் வகையில் மிக அபாண்டமாக பேசுவது போன்று வாய்மொழி வசைபாடுகள்.
இதில் இயல்பில் மிக அமைதியானவர்களாக (இண்ட்ரோவெர்ட் ) அறியப்படுபவர்களின் ஆயுதம் முதல் வகையை சார்ந்தது. அவர்களுக்கு உரத்த குரலிலோ அல்லது தடாலடியாக அசிங்கமான வார்த்தைகளை வெளிப்படையாக கூறியோ தன் உட்சபட்ச கோபத்தை தணித்து கொள்ள தெரியாது.
ஆனால், இயல்பிலேயே (எக்ஸ்ட்ராவெர்ட்) உரக்க பேசுபவர்கள், அதிகமாக பேசுபவர்கள், தன் முனைப்பு, சுயம் பாதிப்பு என எண்ணுபவர்கள் எவ்விதமான சிறிய விஷயமாக இருந்தாலும் சட்டென தங்கள் கோபத்தை, மிரட்சியாகவும், மிக சத்தமாக பேசுவதிலும், எதிரில் இருப்பவர்களுக்கு எதை சொன்னால் பிடிக்காதோ அதை சொல்லி பிதற்றுவதுமாக தங்ககள் கோபத்தை தீர்க்க எண்ணுவார்கள்.
இந்த இரண்டு வகையான கோபத்தின் வெளிப்பாடும் தீமையானதே. இவ்விரண்டும் ஒன்றிற்கொன்று சளைத்தது அல்ல. இன்றைய நவீன உளவியல் உலகில் அடிப்பது போன்ற உடல் ரீதியிலான துன்புறுத்தலும், வாய்மொழி துஷ்பிரயோகம் மூலம் மன ரீதியிலான துன்புறுத்தலும் ஒன்றே. இதில் எது முதலில் தூண்டுதலாக இருக்கிறது என்பது முக்கியம்.
இதில் எது முதலில் தூண்டுதலாக இருக்கிறது என்பது முக்கியம். அதாவது வாய் வார்த்தைகளால் கைகலப்பு ஆகிறதா அல்லது கைகலப்புகளால் வார்த்தை துஷ்பிரயோகம் நாககிறதா என்பதே. அனால், 95%, வார்த்தை துஷ்பிரயோகத்திலேயே கைகலப்பு நடக்கிறதென்பது புள்ளிவிவரங்கள் கூறுகிறது, இது குடும்ப பிரச்சினையானாலும், வெளிவிவகார பிரச்சினை என்றாலும் வார்த்தை பிரயோகம் மிக முக்கிய பங்காற்றுகிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது.
யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்
சோகப்பார் சொல்லிழுக்கு பட்டு
என்பது வள்ளுவர் வாக்கு.
நம் இந்திய கலாச்சாரத்தில், பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிப்புடன், திட்டியும், சில சமயங்களில் அடித்தும் வளர்ப்பது என்பது மிக இயல்பான ஒன்று. அது போன்று கணவன் மனைவியிடமும் சகோதர சகோதரிகளும் இருக்கும் வீடுகளில் அடித்து கொள்வது பிறகு சேர்ந்து கொள்வது என்பது மிக சகஜம்.
பேசுவதற்குக் கற்றுக்கொடுக்கும் பெற்றோர், மெளனமாக இருப்பதற்குக் கற்றுத் தரவில்லையே ஏன்? மிக முக்கியமான உளவியல் கேள்வி. இன்றைய அவசர காலகட்டத்தில், நினைத்தவுடன் உலகின் எந்த மூலைக்கும், எப்படியும் பேச முடிகிற தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட சுழலில், எதற்கும் காத்திருக்க வேண்டியிராத நிதானமற்ற சூழலில், பேச்சே பலருக்கும் பிரச்னைகளைக் கொண்டுவருகிறது.
https://www.talkspace.com/blog/types-of-anger/
கோபம் என்பது கோபப்படுபவரை படுபவரை பொறுத்து, காரணத்தை பொறுத்து, நோக்கத்தை பொறுத்து அது பல்வேறு நிலையை அடைகிறது.
ஆக்கபூர்வமான உறுதியான கோபம் (Assertive Anger) - இவ்வகையான கோபம் மிக நேரடியானது, நேர்மறையான மாற்றங்களைச் செய்யத் தூண்டும் வகையில் பயனுள்ளதாக இருக்கும். முகத்தில் அடித்தாற்போல் பேசுதல், சத்தமாக கத்துதல் போன்றவற்றில் ஈடுபடுவதற்குப் பதிலாக, "எனக்கு கோபத்தை உண்டாக்குகிறது..." அல்லது " உனது புரிதல் தவறானது " போன்ற சொற்றொடர்களுடன் தன்னை வெளிப்படுத்தும் கோபம் இதுவாகும்.
நடத்தை கோபம் (behavioural anger)
நாள்பட்ட கோபம் (chronic)
அழிக்கும் கோபம் (destructive)
தார்மீக / தீர்ப்பு கோபம் (moral/judgemental)
அதீத கோபம் (overwhelmed)
செயலற்ற ஆக்கிரமிப்பு கோபம்
பழிவாங்கும் கோபம் (retaliatory)
சுய தவறான கோபம்
அமைதியான கோபம்
வாய்மொழி கோபம்
கொந்தளிப்பான கோபம்
வேண்டுமென்றே கோபம்
போதை / தவறான கோபம்
There are various type of Anger.
assertive anger,
behavioural anger
chronic anger
destructive anger
moral/judgemental anger
overwhelmed anger
passive aggressive anger
retaliatory anger
self abusive anger
silent anger
verbal anger
volatile anger
deliberate anger
addictive/abusive anger