பாடம் நடத்துவதில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு தனி பாணியுண்டு. சிலர் மெதுவாக மந்திர உச்சாடனம் செய்வது போல் வார்த்தைகளை உதிர்ப்பர், சிலரோ இவருக்கோ சொல்வதை போல் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டி தீர்த்திவிடுவார்கள். மற்ற சிலர் எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல் வகுப்பறைக்குள் வந்தபின் அந்த கணம் வாயில் என்ன வருகிறதோ அவற்றையெல்லாம் ஓரத்தை குரலில் சொல்லிவிட்டு போய் விடுவார்கள். ஒரு சிலரோ கர்மா சிந்தனையுடன் முழுதாயாரிப்புடன் வந்து நிதானமாக வகுப்பெடுப்பதோடு அவ்வப்போது கீழிறங்கி வந்து சந்தேகங்களை போக்கி மாணவர்களை படிப்பின் ஆனந்தத்தினை உணரச்செய்வார்கள்.