என் வாழ்க்கை பயணத்தின் சில உண்மை நிகழ்வுகளை, வலைப்பதிவாக எழுதுவதற்கான காரணம், ஒவ்வொரு முறையும் நான் எனது கடந்த கால நாட்களை நினைவுகூறும்பொழுதும், ஏதேனும் சில முக்கிய முடிவெடுக்கும் பொழுதும் அதன் சாதக பாதகங்கள் குறித்து சுயபரிசோதனை செய்வைது வழக்கம். அவ்வாறு நான் நடந்து வந்த பாதை, சந்தித்த மனிதர்கள், அடைந்த சிரமங்கள், பெற்ற அனுபவங்கள் மற்றும் அலைக்கழித்த சில ஏமாற்றங்களை எப்படி கடந்து, சில வற்றை எதிர்த்து, சிலவற்றை சமாளித்து இன்று ஓரளவிற்கு வெற்றிகரமான மனிதனாக இருக்கிறேன் என்று எண்ணிப்பார்க்கும் பொழுது, நாம் சரியான திசையில் தான் பயணித்திருக்கிறோம் என்றும், சரியான அணுகுமுறை, மனதளவில் தெளிவான சிந்தனையும், மற்றும் உறுதியான இலக்கு என்று வைத்துக்கொண்டு சரியாகத்தான் பயணித்திருக்கிறோம் என்று என் மனது உறுதியும், தெளிவும் அடையும். பல சமயம் அதுவே எனக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாயும் இருக்கும்.
இந்த வலைப்பதிவு எனக்கான ஒரு பதிவாகவே, எனக்கு நானே பின்னாளில் திரும்பி பார்த்துக்கொள்ளவும், பழைய நினைவலைகளில் மூழ்கவும் இதை நான் எழுத விரும்பினேன்.
இப்பயணம் ஒரு செய்தியாக கூறாமல், இதை ஒரு சுவையான கதை
போன்றே எனக்கு தோன்றியதால், இதில் என்னையே ஒரு பாத்திரமாகி (மூன்றாம் நபர் பார்வையில், 'நான்' என்று சொல்லாமல் 'அவன்' என்று என்னை குறிப்பிட்டு) அந்நிகழ்வுகளை கதை வடிவில் சொல்ல விரும்பினேன்.
உலகில் பலர் இது போன்று மூன்றாம் நபர் பார்வையில் சுயசரிதை எழுதியிருக்கிறார்கள், அதில் கவரப்பட்ட ஒருவனாக நானும் அது போன்றதொரு முயற்சி செய்யலாம் என்று ஆரம்பித்ததுதான் இந்த வலைப்பதிவு முயற்சி.
நான் பிறந்த கதையோ அல்லது வளர்ந்த கதையோ இங்கு கூற முற்படவில்லை. ஒரு நடுத்தர குடும்பத்தின் சாதாரண இளைஞனின் வயதும் மனதும் வளர்ந்ததிலிருந்தே இதை தொடங்க விரும்பினேன்.
எனவே, என் வாழ்வில் சில மறக்க முடியாத தருணங்கள், அனுபவங்கள், மற்றும் முக்கிய நிகழ்வுகளை மட்டுமாவது பதிவு செய்ய வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்டதே இத்தொகுப்பு.
இது மற்றவர்களுக்கு சுவாரசியமாக இருக்குமா என்று தெரியாது, அனால் இதை படிக்கும்பொழு, சில அல்லது பல நிகழ்வுகள் அவர்களுடைய வாழ்க்கையிலும் நடந்தது போன்ற ஒரு உணர்வு நிச்சயம் உண்டாக்கலாம்.
என் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இதை எழுதுகிறேன். எனக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்கள் தனித்துவமானவை allathu ungaludaiya vazhakaiyilum nadanthirukkum. இந்த அனுபவங்கள் என்னை எப்படி செழுமைப் படுத்தியுள்ளன என்பதோடு, எனக்கு ஏற்பட்ட சிக்கல்களை நான் எப்படி எதிர்கொண்டேன் என்பதையும் சொல்ல வேண்டும் என்பதே எனது அவா. தனித்தனியாக பலருக்கு பலசமயங்களில் சொன்னதை ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டும் என விரும்புகிறேன். ippathivai படிக்கும் அனைவரையும் போலவே, நானும் ஒரு சாதாரண மனிதனே. மிக மிகச் சாதாரண மனிதனாகவே, எனக்கு ஏற்பட்ட பல சம்பவங்களை சந்தித்தேன். ஒரு சாதாரண மனிதன் சந்திக்கக் கூடாத பல்வேறு சிக்கல்களை, அழுத்தங்களை சந்தித்தேன். பலரின் உதவியோடு, இந்த சிக்கல்களை நான் எப்படி எதிர்கொண்டேன் என்பதை உங்களோடு ஒரு உரையாடல் வழியாக பகிர்ந்து கொள்ளவே இந்நூலை எழுதியுள்ளேன்.
அலுவலக நாட்கள்
வெளிநாட்டு பயணம்