தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
- பாரதி
மொழிகள் ஆயிரம் இருப்பினும்,
மெளனம் மட்டுமே அழகாய் பேசுகிறது, யாரையும் புண்படுத்தாமல்.
- எங்கேயோ படித்தது
எந்த ஒன்றையும்...
அதன் போக்கில் அடைவதற்கு பொறுமை வேண்டும்.
உன் போக்கில் அடைவதற்கு திறமை வேண்டும்.
- எங்கேயோ படித்தது
நினைப்பதை சரியாக நினைத்தால்
நடப்பதும் சரியாகவே நடக்கும்...
- படித்ததில் பிடித்தது
அம்மாவின் திருப்த்தி சமைத்து முடிப்பதில் இல்லை !
பிள்ளைகள் சாப்பிட்டு முடிப்பதில் தான் இருக்கிறது !!
- எங்கேயோ படித்தது
கால் நனையாமல் கடல் கடந்தவன் உண்டு
ஆனால் கண் நனையாமல் வாழ்க்கையை கடந்தவர்கள் இல்லை.
- படித்ததில் பிடித்தது