மண்ணில் போடப்பட்ட அனைத்து விதைகளும் ஒரே மண்ணைத் தின்று ஒரே தண்ணீரைக் குடித்து வளர்கின்றன.
ஆனால் மாமரம் கொடுக்கும் பழத்திற்கும் வேப்ப மரம் கொடுக்கும் பழத்திற்கும் ருசியில் வேறுபட்டு இருப்பது போல நாம் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் தான். ஒரே நீரைத் தான் அருந்துகிறோம், ஒரே காற்றைத் தான் சுவாசிக்கிறோம்.
ஆனால் வழியில் எதை சேகரித்து நம்மில் உள்ளடக்கமாக அமைத்துக் கொள்கிறோமோ அதைப் பொறுத்துத் தான் நம்முடைய தன்மை வெளிப்படும்.
நாம் எதை சேர்க்கிறோம் அற்பத்தையா? இல்லை அற்புதத்தையா?
அற்பம் என்னும் ஆறு குணங்கள்
1 பேராசை
2 சினம்
3 கடும்பற்று
4 முறையற்ற காமம்
5 உயர்வு தாழ்வு மனப்பான்மை
6 வஞ்சம்
அற்புதம் என்னும் ஆறு குணங்கள்
1 நிறை மனம்
2 பொறுமை
3 ஈகை
4 ஒழுக்கம்
5 சம நோக்கு
6 மன்னிப்பு
இவை அனைத்திற்கும் அடித்தளமாக உள்ள அன்பை புரிந்து கொண்டால் அற்பம் நம்முள் எட்டிப் பார்காது. அற்புதம் நம்மை விட்டு விலகிப் போகாது.
- படித்ததில் பிடித்தது
நமது நாட்டின் பிரபல இதிகாசங்களில் ஒன்றான மஹாபாரதம் உணர்த்தும் உண்மைகள்/ அறகருத்துக்கள்:
மோகத்தில் வீழ்ந்துவிட்டால்
மொத்தமாய் வீழ்ந்திடுவாய்
சாந்தனுவாய்....
சத்தியம் செய்துவிட்டால்
சங்கடத்தில் மாட்டிடுவாய்
கங்கை மைந்தானாய்..
முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்
பாண்டுவாய்....
வஞ்சனை நெஞ்சில் கொண்டால்
வாழ்வனைத்தும் வீணாகும்
சகுனியாய்...
ஒவ்வொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு
குந்தியாய்...
குரோதம் கொண்டால்
விரோதம் பிறக்கும்
திருதராஷ்டிரனாய்....
பெற்றோர்கள் செய்யும் பாவங்கள்
பிள்ளைகளை பாதிக்கும்
கௌரவர்கள்...
பேராசை உண்டாக்கும்
பெரும் அழிவினையே
துரியோதனனாய்...
கூடா நட்பு
கேடாய் முடியும்
கர்ணனாய்...
சொல்லும் வார்த்தை
கொல்லும் ஓர்நாள்
பாஞ்சாலியாய்..
தலைக்கணம் கொண்டால்
தர்மமும் தோற்கும்
யுதிஷ்டிரனாய்.....
பலம் மட்டுமே
பலன் தராது
பீமனாய்....
இருப்பவர் இருந்தால்
கிடைப்பதெல்லாம் வெற்றியே
அர்ஜூனனாய்....
சாஸ்திரம் அறிந்தாலும்
சமயத்தில் உதவாது
சகாதேவனாய்..
விவேகமில்லா வேகம்
வெற்றியை ஈட்டாது
அபிமன்யூ
நிதர்சனம் உணர்ந்தவன்
நெஞ்சம் கலங்கிடான்
கண்ணனாய்....
வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்....
வாழ்ந்திடலாம் காலமெல்லாம்.
படித்த பாடம்
“ஒரு பாதையை வகுத்து உங்களுடைய இலக்கை நோக்கி நீங்கள் சென்று கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அந்தப் பாதை 100% சரியான பாதை அல்ல என்று உங்களுக்கு தெரிந்ததும், உங்களுடைய அனுபவத்தினாலும் படித்த பாடத்தினாலும் உங்களைத் திருத்திக் கொள்கிறீர்கள், இந்தத் திருத்தங்களைச் செய்து கொண்டும், தன் பாதையில் முன்னேறிக் கொண்டும் ஒரு வெற்றியாளராக ஆவது என்பது... ஒவ்வொரு நாளும் படித்த பாடங்களின் மதிப்புதான் உங்களை முன்னேறச் செய்கிறது.”
- படித்ததில் பிடித்தது
சலனமற்ற மனம் சக்தியைப் பெருக்கும்
அமைதி நிறைந்த மனதைப் பெறுவதற்கு முதன்மையான வழி அதைக் வெறுமை செய்யப் பயிற்சி செய்வதுதான்.
" பயங்கள், பகைமை உணர்ச்சிகள், மற்றும் பாதுகாப்பின்மை உணர்வுகள், பின்வருத்தங்கள், மற்றும் குற்ற உணர்வுகள் ஆகியவற்றை உங்கள் மனத்திலிருந்து வெளியேற்றுவதற்குக்
கண்டிப்பாகப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். உங்கள் மனத்தைக் வெறுமை செய்ய முயற்சிக்கிறீர்கள் என்ற எண்ணமே உங்களுக்கு நிம்மதி அளிக்கும் ”
மனதைக் வெறுமை செய்தால் மட்டும் போதாது. மனம் காலியாகும்போது வேறு ஏதேனும் அதில் கண்டிப்பாக நுழையும். மனதால் ஒரு வெற்றிடமாக இருக்க முடியாது. ஒரு வெற்று மனத்துடன் உங்களால் நிரந்தரமாக வளைய வர முடியாது. சிலருக்கு அது சாத்தியம் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் மொத்தத்தில், வெறுமை செய்யப்பட்டுள்ள மனம் மீண்டும் நிரப்பப்பட வேண்டும். இல்லையென்றால், நீங்கள் தூக்கி எறிந்த பழைய, மகிழ்ச்சியற்ற எண்ணங்கள் மீண்டும் மெதுவாக உள்ளே நுழைந்து உங்கள் மனத்தில் குடியேறிவிடும்.
அது நிகழாமல் தடுக்க வேண்டுமென்றால், உடனடியாக உங்கள் மனத்தை ஆரோக்கியமான எண்ணங்களாலும் படைப்பு எண்ணங்களாலும் நிரப்பத் துவங்குங்கள்.
ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில், கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, அமைதி குறித்த எண்ணங்களை எண்ணுவதற்குப் பயிற்சி செய்யுங்கள். நீங்கள் இதுவரை கண்டிராத மிக அமைதியான காட்சிகளை உங்கள் மனத்தில் நிலைகொள்ளச் செய்யுங்கள். அமைதியையும், சாந்த மனப்போக்குகளையும் உருவாக்குவதற்கு இன்னும் பல நடைமுறை வழிகள் உள்ளன. அவற்றில் ஒரு வழி, உரையாடல் மூலமாக அமைதியை உருவாக்குவது. நாம் பயன்படுத்தும் வார்த்தைகள், மற்றும் நாம் அவற்றைப் பயன்படுத்தும் விதம் ஆகியவற்றின் மூலம் பதற்றம் நிறைந்தவர்களாகவும், உணர்ச்சிவசப்படுபவர்களாகவும், வருத்தப்படுபவர்களாகவும் நம்மை நம்மால் உருவாக்கிக் கொள்ள முடியும்.
நாம் நம்மை நேர்மறையான விளைவுகளுக்கு இட்டுச் செல்லலாம் அல்லது எதிர்மறையான விளைவுகளுக்கு இட்டுச் செல்லலாம். நமது பேச்சின் மூலம் அமைதியான பதில்களைப் பெறலாம். அமைதியாக இருப்பதற்கு மென்மையாகப் பேச வேண்டும். முடிந்த அளவு உங்கள் மனத்தை அமைதியான அனுபவங்களால் நிரப்புங்கள். பிறகு, திட்டமிட்டு அந்த நினைவுகளில் மீண்டும் பயணித்துப் பாருங்கள். ஓர் அமைதியான மனத்தைப் பெறுவதற்கான ஒரு சுலபமான வழி, ஓர் அமைதியான மனத்தை உருவாக்குவதுதான்.